1.
கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய்க் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை – கல்வாரி
2.
அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக் கோலமடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார்- கல்வாரி
3.
கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே- கல்வாரி
1.
kalvari mamalaimel kai kalkal aanikalal
kadavabpadtavarayk karthdhar thongkak kanden
kurusin vedhanaiyum sirasin mulmudiyum
kuruthi sinththuvathum urukkirren manathai – kalvari
2.
anjsathe en makane minjsum un pavamathal
nenjcham kalangkathe dhanjcham nane unakku
enakken ibpadu unakkakaththane
iinak kolamadainththen unnai iradsiththen endrar- kalvari
3.
karthdharin sathdhamathai saththiyam endru nambi
pakthiyutan vizhunththu muthdham seythen avarai
en pavam neengkiyathe ekkedum oodiyathe
sanththekam mariyathe sanththosham pongkiyathe- kalvari